கெடா மீசையில் கெத்துக்காட்டும் ரஜினி! 'பேட்ட' பட டீசர் வெளியானது!

புதன், 12 டிசம்பர் 2018 (11:07 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று அவர் தெரிவித்த பின், கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும்.


 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது "பேட்ட" படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது அப்போது பேசிய ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நான் இருக்கமாட்டேன் ஆதலால் யாரும் அங்கு வரவேண்டாம் என அறிவுறுத்தினார். 
 
இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா  உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பேட்ட. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.
 
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் மற்றும் தீம் இசை 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது  சரியாக 11 மணிக்கு ,  'பேட்ட'  படத்தின் டீசரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  
 
 


இந்த டீசரில், வேட்டி சட்டை அணிந்து கெடா மீசையில் கெத்தா வரும் ரஜினியும், இளமையான தோற்றத்தில் உள்ள மற்றொரு ரஜினியும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவாகியுள்ள "மாஸ் மரணம்"பாடலும் இந்த டீசரில் இடம்பெறுள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் அவரின்  ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக அமைந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்