பிரபல நடிகரின் பட டிரைலருக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

வியாழன், 1 ஏப்ரல் 2021 (23:45 IST)
மாதவன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் ராக்கெட்ரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

 இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவன் இப்படத்தில் முதியவராகவும், இளம் வயதினராகவும் நடித்துள்ளார்.  மேலும் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் இப்படத்தின் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்துள்ள மாதவனை பேட்டிகாண்பதுபோல் பத்திரிக்கையாளர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இப்போது ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மாதவன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் ராக்கெட்ரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இந்நிலையில் அமிதாப்பச்சன் இப்படத்தின் டிரைலரை  பாராட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மாதவன், அமிதாப் ஜி உங்கள் வாழ்த்து என்னையும் என் குடும்பத்தையும் மேலும் உற்சாகப்படுத்துகிறது.என்னை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு நம்பிக்கையுடன் செல்லவும் உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Dear Amitji. Your blessings have always meant the world to us. To me and my family especially. I am able to move ahead with a lot more confidence now thanks to that.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்