அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்யாசமான மாடர்ன் உடையணிந்து போட்டோ ஷூட் ஸ்டில் ஒன்றை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு குடும்ப குத்துவிளக்கு போல் உடையணிந்து வருவார். அதே போல் தற்ப்போது மேலேசியாவில் இருப்பதால் அந்த இடத்திற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.