சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான மெகா தொடர் நந்தினி. அந்த சீரியலுக்கு சுந்தர் சி கதை எழுத குஷ்பு தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலமாக தயாரித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இப்போது குஷ்பு உருவாக்கியுள்ளார். கிட்டத்தட்ட 50 எபிசோட்கள் வரை படமாக்கப்பட்டுவிட்டதாம்.
இந்த தொடரை ஒளிபரப்ப சன் டிவியில் அவர் நேரம் கேட்டு இருந்தாராம். ஆனால் குஷ்பு இப்போது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளால் திமுகவினரிடம் இருந்து அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என சன் தொலைக்காட்சிக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளதாம். அதனால் அவர்கள் கிடப்பில் போட இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் பேச்சுவார்த்தை நடத்தி ப்ரைம் டைமில் ஒளிபரப்ப உள்ளாராம் குஷ்பு.