இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மதுரை அருகே நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.
விஜய் முத்தையா, தர்ஷினி, பிரிகிடா சாகா ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தில் வில்லனாக பரத் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கேகேஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.