பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து சில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
அதில் , " அனைவருக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்திற்கு இன்று ஒரு நல்ல நாள் ... இந்த நல்ல நாளில் என் மகன் பிறந்ததையும் , அவனுக்கு பெயர் சூட்டியதையும் எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனக்கு இப்படி ஒரு அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் அத்வைத்" என மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.