சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

vinoth

புதன், 15 மே 2024 (14:43 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் பாலிவுட்  இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் கர்ணா என்ற இந்த படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் அதற்கான பட்ஜெட் 600 கோடி ரூபாயில் உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தில் நிக் பவல் என்ற ஸ்டண்ட் இயக்குனர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் பிரேவ் ஹார்ட்’ மற்றும் ’கிளாடியேட்டர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்திலும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்