தனுஷ் வேடத்தில் சுதீப்

சனி, 7 ஏப்ரல் 2018 (15:55 IST)
தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரீமேக்கில், தனுஷ் வேடத்தில் சுதீப் நடிக்கிறார்.



தனுஷ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்திருந்தனர். தனுஷே தயாரித்த இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்தார்.

இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷும், தனுஷ் வேடத்தில் சுதீப்பும் நடிக்கின்றனர். ரேவதி வேடத்தில் நடிக்க சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்