நடிகர் கமலுக்கு நன்றி கூறிய சு.வெங்கடேசன் எம்பி

செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:43 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு சீசனிலும், வாரம்தோறும் நடிகர் கமல்ஹாசன் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி பரிந்து செய்வார்.

அந்த வகையில், புயலிலே ஒரு தோனி, வெண்முரசு, அழகர் கோயில், வாசிப்புது எப்படி, நாளை மற்றொரு நாளே ஆகிய நூல்களை அறிமுகம் செய்திருந்தார்.

தற்போது, 6 வது சீசன் நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது, கமல் காவல் கோட்டம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் மதுரை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நூலினை அறிமுகம் செய்தார்.

இதுகுறித்து, சு.வெங்கடேசன் தன் டுவிட்டர் பக்கதிதில், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான
திரு. கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்தகப் பரிந்துரை பகுதியில் திரைக்கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான
திரு. கமல்ஹாசன் வேள்பாரியை பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.@ikamalhaasan pic.twitter.com/YDoTWgA5KZ

— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 2, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்