ஆன்லைனில் கல்வி கற்க குப்பைகளை சேகரிக்கும் மாணவர்கள்

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (21:35 IST)
அண்டை நாடான இந்தோனேஷியாவில் மாணவர்கள்  தங்களின் இண்டர்னெட் கட்டணம் செலுத்துவதற்காக சாலையில் உள்ள பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அதை விற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.

கொரொனாவால் சர்வதே பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மக்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கத்தாமதமாகும் நிலை உள்ளதால் இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில்  ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் இதுவரை 2,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,000 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

எனவே அரசு வீட்டிலிருந்த படிமாணவர்கள் கற்க ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைன் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த இக்கட்டான நிலையிலும் தெருக்கள் மற்றும் குப்பைக் கூடங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து அதைக் கடைகளில் விற்று இணையதள சந்தா செலுத்தி  ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்