க்யூப் மற்றும் யு.எப்.ஓ. போன்ற டிஜிட்டல் முறைகளின் அதிக கட்டணத்தை எதிர்த்து, மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது தெலுங்குத் திரையுலகம். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகங்களையும் அது கேட்டுக் கொண்டது. அவர்களும் கோரிக்கையை வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தனர். அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் எந்த புதுப்படமும் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறும், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் க்யூப் மற்றும் யு.எப்.ஓ. நிறுவனங்கள் அழைப்பு விடுத்தன. முதலாவதாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அதுவும் தோல்வி அடைந்ததால், 23ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அதுவரை, ஸ்டிரைக்கில் எந்தவிதமான மாற்றமும் இல்லை தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அறிவித்துள்ளது.