செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை முடித்த செல்வராகவன் சந்தானம் நடிக்கும் காதல் படத்தை இயக்குகிறார். இதன் நாயகி யார் என்பது முடிவாகவில்லை. யுவன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நாளை தொடங்குவதாக கூறியிருந்தனர். நாளை நாடா புயல் சென்னையை தாக்கவிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.