ஐக் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. காமெடி கலந்த ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது. ஜீவா ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். காமெடியனாக சூரி நடித்துள்ளார். இந்தப் படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு, பேய் என்றால் பயப்படுவாராம் ஸ்ரீதிவ்யா. அதனால், பேய்ப் படங்களைப் பார்ப்பதையும் தவிர்த்து விடுவாராம். ஆனால், இந்தப் படத்தில் நடித்தபிறகு, அந்த பயம் போயே போச்சாம். அப்படி என்ன நடந்தது இந்தப் படத்தில்? பேயாக நடித்த நடிகர்களுக்கு, ஸ்ரீதிவ்யா முன்னால் தான் மேக்கப் போட்டார்களாம். பேய்ப் படங்களை இப்படித்தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்துகொண்ட ஸ்ரீதிவ்யாவு, இப்போதெல்லாம் நிஜப் பேயே நேரில் வந்தாலும் அசால்ட்டாக டீல் பண்ணுவாராம்.