மறைந்த ஜாம்பவான் பாடகர் எஸ் பி பி யின் பிறந்தநாள் இன்று!

வெள்ளி, 4 ஜூன் 2021 (11:34 IST)
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக உயிரிழந்த முன்னணி பாடகர் எஸ் பி பியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய சினிமாவில் சுமார் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ் பி பி. தான் இறக்கும் வரையிலும் ஓய்வில்லாமல் பாடல்களைப் பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு விட்டாலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பின்னர் இன்று அவரது 75 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சமூகவலைதளங்களில் அவரின் நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்