ஷங்கர் படத்தில் கமிட்டான தென்கொரிய நடிகை!

வெள்ளி, 5 மார்ச் 2021 (09:30 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக தென்கொரிய நடிகை ஒருவர் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும், ஷங்கர் தனது மகளின் திருமணத்தை முடிக்கவும் முன்னுரிமைக் கொடுக்க உள்ளார்களாம். 

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பே சூஜியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்