என் அப்பாவுக்கு தமிழ் சரியாக எழுத வராது: Hoote செளந்தர்யா ரஜினிகாந்த்

திங்கள், 25 அக்டோபர் 2021 (17:22 IST)
என் அப்பாவுக்கு தமிழ் சரியாக எழுத வராது, அவர் அரசியல் குறித்த டுவிட்டுகளை தமிழில் பதிவு செய்வதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அதன் மூலம்தான் எனக்கு இந்த Hoote செயலி ஐடியா வந்தது என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
 
சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய சமூக வலைதளமான Hoote என்ற செயலியை இன்று ரஜினிகாந்த் அவர்கள் தொடங்கி வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சமூக வலைதளங்களில் டைப் அடிக்க தேவையில்லாமல் குரல் ஒலி மூலமே தங்களது கருத்துக்களை பகிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எனது அப்பாவுக்கு தமிழ் சரியாக எழுத வராதும் எனவே அவர் அரசியல் குறித்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அதை வைத்து நான் அவருடைய பக்கத்தில் டுவிட் செய்வேன். அப்போது பிறந்தது தான் இந்த Hoote  செயலி ஐடியா என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் எனது அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்கத் தெரியும் என்றும் தமிழ் எழுத தெரியாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது அவருக்கு அன்பு குறையாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்