அமேசான் ப்ரைமில் வெளியாகிறது சூரரை போற்று! – ரிலீஸ் தேதி எப்போ?

சனி, 22 ஆகஸ்ட் 2020 (13:19 IST)
நடிகர் சூர்யா நடித்து வெளியாகவிருந்த ‘சூரரை போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30ம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள அதேசமயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்