நடன் இயக்குனர் சிவசங்கருக்கு உதவ சோனு சூட் உறுதி!

வியாழன், 25 நவம்பர் 2021 (15:27 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் இருக்கும் நடன இயக்குனர் சிவசங்கருக்கு உதவ நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

சிகிச்சைக்கு தேவையான பொருளாதார வசதி இல்லை என்று அவரது குடும்பத்தினர் சார்பாக வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நடிகர் சோனு சூட் சிவசங்கரின் மருத்துவ செலவுகளுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் ‘ அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளேன். அவரைக் காப்பாற்ற என்னால் முடிந்ததை செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்