இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததாகத் தெரிகிறது. இப்படத்தின் விவரகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, நடிகர் சிம்புவின் தயார் உஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நடிகர் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படங்களைத் தடை செய்ய முயற்சிக்கிறார்கள்….எங்களைக் கட்டப்பாஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.