பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எதையும் சுவாரஸ்யமாகவே செய்வதில்லை. வர வர நிகழ்ச்சி ரொம்ப போரிங்கா போகிறது. டாஸ்க் ஏதாச்சும் அடிச்சு புரளுவது கொடுத்தாலாவது கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கும் ஆனால், அதுவும் மொக்க டாஸ்க் கொடுத்து சலிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சீசனில் கோர்த்து விட்ட காதல் டிராக்கும் சரியாக இல்லை. அதனால் அந்த கான்செப்டை மூட்டை கட்டிவிட்டனர். இருந்தும் ஷிவானி பாலா உடனே கூட்டு சேர்ந்துக்கொண்டு அவர் செய்யும் எல்லா வேலைக்கும் துணை போகிறார். அத்துடன் பாலாஜி கேரக்டரில் ஷிவானி காதலியா இல்ல தங்கச்சியா என்றே தெரியவில்லை. ஒரு நிமிசம் கூட பிரியாம ஓட்டிட்டு இருக்காங்க. இதுல சம்பந்தமே இல்லாமல் அண்ணன் தங்கை BGM வேற...