சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 20’ படப்பிடிப்பு ஆரம்பம்!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:50 IST)
சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 20’ படப்பிடிப்பு ஆரம்பம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 20 வது படத்தின் பூஜை இன்று காரைக்குடியில் நடைபெற்றதாகவும், பூஜையை அடுத்து படப்பிடிப்பும் தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் முதல் கட்டமாக நடைபெறும் என்றும் இதனை அடுத்து இலண்டன் புதுச்சேரி சென்னை ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
இன்றைய பூஜையில் சிவகார்த்திகேயன் சத்யராஜ் இயக்குனர் அனுதீப் உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்