டான் படத்தின் பிஸ்னஸை இன்னும் தொடங்காத லைகா… இதுதான் காரணமா?

சனி, 5 பிப்ரவரி 2022 (09:38 IST)
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை அவரோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திடீரென கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை தமிழ்நாட்டில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் அதே நாளில் லைகா தயாரித்துள்ள மற்றொரு படமான டான் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லைகா நிறுவனத்துக்கு இக்கட்டான சூழல் உருவாகும் நிலையில் டான் திரைப்படத்தின் ரிலீஸை கண்டிப்பாக லைகா நிறுவனம் தள்ளிவைக்கும் என சொல்லப்படுகிறது.

அதற்கேற்றார் போல ஆர் ஆர் ஆர் படத்தின் விநியோக உரிமையை தொடங்கியுள்ள லைகா நிறுவனம், டான் படத்தின் வியாபாரத்தை இன்னும் தொடங்கவே இல்லையாம். இதனால் மார்ச் 25 ஆம் தேதி டான் திரைப்படம் வெளியாகாது என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்