சிம்புவுக்கு 1000 அடியில் போஸ்டர்: மதுரை ரசிகர்கள் அசத்தல்

திங்கள், 18 ஜூலை 2022 (18:47 IST)
மதுரை சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை செய்துள்ளனர்.  கோலிவுட் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் 1000 அடியில் போஸ்டர் ஒட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் மஹா திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளதை அடுத்து ஆயிரம் அடி போஸ்டரை ஒட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
தற்போது சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
மாநாடு என்ற சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தை அடுத்து வெளியாகும் சிம்புவின் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்