எஸ்ஜே சூர்யா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய், 31 மே 2022 (19:58 IST)
எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகிவரும் அடுத்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
மாநாடு படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள் நல்ல வியாபாரம் ஆகி வருகின்றன என்பதை பார்ப்போம்
 
 இந்த நிலையில் எஸ் ஜே சூர்யாமுக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் பொம்மை. பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
எஸ் ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என சற்றுமுன் எஸ் ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்