சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஆகஸ்ட் 5 என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விநியோகிஸ்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரும் ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாக அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.
காமெடி மற்றும் ஆக்சன் கலந்து உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.