படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இடையில் சல்மான் கான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றதால் அந்த படத்தில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தைத் தொடங்கவுள்ள முருகதாஸ் மீதமுள்ள காட்சிகளை அடுத்த மாதத்துக்குள் முடிக்கவுள்ளாராம். அதன் பின்னர் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.