சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகி வரும் படம் Mr.லோக்கல். 'வேலைக்காரன்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு இன்று இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர் வெளியாகி சில நிமிடங்களில் ஏகப்பட்ட லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.