சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது..
இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், படத்தில் கமல்ஹாசன் ஒருவிதத்தில் சம்மந்தப்பட உள்ளாராம். படத்தில் இடம்பெறும் முக்கியமான குரல் ஒன்றுக்காக டப்பிங் பேச கமல்ஹாசனை அனுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.