சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தையும் ரிலீஸ் செய்கிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்- ரிலீஸ் எப்போ?

சனி, 18 பிப்ரவரி 2023 (15:26 IST)
சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக உருவாகி வருகிறது மாவீரன் திரைப்படம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சீனா சீனா” என்ற பாடல்  ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ்கத்தின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாகவும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்