சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

புதன், 15 பிப்ரவரி 2023 (18:52 IST)
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாவீரன் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
அதன்படி மாவீரன் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரத் சங்கர் இசையில் உருவான இந்த பாடல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம்  விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்