சிம்பு-சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் ரிலீஸா?

திங்கள், 2 ஜனவரி 2023 (17:36 IST)
ஜனவரி 12ஆம் தேதி அஜீத் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் வரும் மார்ச் 30ஆம் தேதி சிம்பு நடித்த பத்து தலை மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் தற்போது கார்த்தியை அடுத்து சிவகார்த்திகேயன் சிம்புவுடன் மோத உள்ளதாக கூறப்படுகிறது
 
‘பத்து தல’  படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின் படி மார்ச் 30ஆம் தேதி இந்த படம் ரிலீஸாவது உறுதி என்றும் கூறப்படுகிறது. 
 
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்