’டான்’ படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த சிவகார்த்திகேயன்!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:24 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட்டில் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
டன் படத்தின் சிங்கிள் பாடல் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார் 
 
அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ஆதித்யா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.  இந்த படத்தை லைகா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்