ராஷ்மிகாவால் தள்ளிப் போன சிவகார்த்திகேயன் படம்..!

vinoth

புதன், 11 டிசம்பர் 2024 (08:50 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனரானார் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத சூழலால் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடனே மீண்டும் இணைகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கவிருந்த ராஷ்மிகாவின் தேதிகள் கிடைக்காததால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்