ரஹ்மான், அனிருத்தை எல்லாம் முந்திய இளம் இசையமைப்பாளர்… ஸ்பாட்டிஃபையில் முதல் இடத்தில் ‘கட்சி சேர’ பாடல்!

vinoth

வியாழன், 5 டிசம்பர் 2024 (12:53 IST)
ஆன்லைன் ஸ்ட்ரிமீங் தளங்களில் ஒன்றான ஸ்பாட்டிஃபை இந்தாண்டுக்கான அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடலாக ‘கட்சி சேர’ பாடல் முதலிடம் பிடித்துள்ளது.

அதற்கடுத்த இடங்களில் மனசிலாயோ, விசில் போடு, அச்சச்சோ மற்றும் வாட்டர் பாக்கெட் ஆகிய பாடல்கள் இடம்பிடித்துள்ளன. அனிருத் மற்றும் ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களின் பாடல்களை விட இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசை மற்றும் வரிகளில் உருவான ‘கட்சி சேர’ பாடல் இளைஞர்களை அதிகளவில் கவர்ந்து அதிகம் கேட்கப்பட்ட பாடலாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் தந்த புகழின் மூலமாக தற்போது அப்யங்கரின் திரைத்துறைக்குள் இசையமைப்பாளராக நுழைந்துள்ளார். லோகேஷ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்துக்கு அவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்