மலேசியாவிற்கு பறக்கும் சிவா, நயன்!!

வியாழன், 23 மார்ச் 2017 (14:37 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். 


 
 
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது.
 
சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. 
 
இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்திக்கு (ஆகஸ்ட் 25) படம் வெளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்