மீண்டும் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்… பண்டிகை தேதியைக் குறிவைக்கும் படக்குழு!

vinoth

திங்கள், 18 மார்ச் 2024 (07:40 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரில் இருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்துக்கு இதுவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு இல்லாத அளவுக்கு 60 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னும் சில நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது விநாயகர் சதுர்த்திக்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்