கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு பிறந்ததிலிருந்தே பார்வை கிடையாது. குக்கூ படம் உட்பட 40 படங்களுக்கு மேல் அவர் பாடியிருந்தாலும், வீர சிவாஜி படத்தில் அவர் பாடிய சொப்பன சுந்தரி நான் தானே பாட்டு தான் ஹைலைட்.
கண்பார்வையற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். இவரை கெளரவிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உலக தமிழ் கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த பட்டம் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் 67 மற்றும் 12 கீர்த்தனைகளும் அடங்கும்.