நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இருவரும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா ஆகியோரின் அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, பாடகி கெனிஷாயும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவகாரத்தில் இருவரும் பிரிய கெனிஷா தான் காரணம் என்ற கருத்தை மறைமுகமாக பலர் கூறிய நிலையில் இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், கெனிஷா ஒரு விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "நடந்த எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் என்று பேசுபவர்கள், நீதிமன்றத்திற்கு வந்தால் உண்மை தெரிய வரும். என் மீது வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள். நான் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். பொய்யான குற்றச்சாட்டுகளால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். கர்மா பற்றி பேசுகிறார்கள், ஆனால் பலருக்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்க விரும்பவில்லை. நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன். அவரிடம் சரணடைகிறேன். எல்லாவற்றையும் அவரிடம் விட்டுவிடுகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.