சிம்பு ரசிகர்களின் தரம்கெட்ட விமர்சனம்

வியாழன், 30 ஜூன் 2016 (12:59 IST)
ரெமோ படவிழாவில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், எனக்கு பாடல் எழுத வாய்ப்பு தந்தவர் அனிருத் என்று குறிப்பிட்டார்.


 


அதனை கண்டித்து சிம்பு ரசிகர்கள் விக்னேஷ் சிவனை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியும், மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.
 
ரெமோ படவிழாவில் குறுகிய நேரமே விக்னேஷ் சிவனுக்கு பேச தரப்பட்டது. அந்த நேரத்தில் அப்படம் சம்பந்தப்பட்டவர்களை மட்டும்தான் குறிப்பிட்டு பேச முடியும். ரெமோ படத்தின் இசை அனிருத் என்பதால் அவருக்கும் தனக்குமான பந்தத்தை தொட்டு பேசினார் விக்னேஷ் சிவன். 
 
விக்னேஷ் சிவனுக்கு போடா போடி மூலம் இயக்குனர் வாய்ப்பை அளித்தவர் சிம்பு. அவரை ஏன் குறிப்பிடவில்லை என்பதுதான் சிம்பு ரசிகர்களின் கோபம்.
 
ரெமோ விழாவில் தரப்பட்ட ஒரு நிமிடத்தில் அந்த மேடையில் இருந்தவர்களை குறித்து மட்டுமே பேச முடிந்தது. சிம்பு எனக்கு முதல் வாய்ப்பு தந்ததை பலமுறை மேடைகளில் குறிப்பிட்டு பேசியிருக்கிறேன் என விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இதுபோன்ற அசிங்கமான மீம்ஸ்களை தடுத்து நிறுத்தும்படி சிம்புவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்