மாநாடு படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ளாத சிம்பு!

செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:21 IST)
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் வெற்றி விழா இன்று படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் பங்கேற்று நடந்தது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது.

வெளியாகி 3 வாரங்கள் கடந்து நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள மாநாடு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 58 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் சேர்த்து சுமார் 97.5 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஓரிரு நாளில் 100 கோடி க்ளப்பில் இணைய உள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் சிம்புவின் படமாக மாநாடு அமைய உள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. ஆனால் அதில் படத்தின் நாயகனான சிம்பு கலந்துகொள்ளவில்லை. தயாரிப்பாளருக்கும் சிம்புவின் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் சிம்பு இதில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்