’வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (12:10 IST)
சிம்பு நடிப்பு வந்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்