சிம்புவின் ‘ஒஸ்தி 2’ படம் குறித்த சூப்பர் தகவல்!

வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:51 IST)
தளபதி விஜய் நடித்த ’கில்லி’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் தரணி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஒஸ்தி’
 
இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் வசூலில் படுதோல்வி அடைந்ததால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் ‘ஒஸ்தி 2 படத்தை தயாரிக்க வேண்டும் என சிம்பு ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தற்போது நிறைவேறும் நிலையில் உள்ளது 
 
ஆம் ,அஜித்தின் விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தற்போது ‘ஒஸ்தி 2’படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் இந்தப் படத்தில் சிம்பு நடிக்க, தரணி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சிம்பு தற்போது ஹன்சிகாவுடன் மஹா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள ’மாநாடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் இருந்த கலந்துகொள்ளவுள்ளார். இந்த நிலையில் ’ஓஸ்தி 2’ படத்தின் அறிவிப்பு வெளிவந்தால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே போவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்