அவரது சிகிச்சைக்கு ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி ஆகியோரும் நிதி உதவி செய்துள்ளனர் என்பது குறித்த தகவலை பார்த்தோம். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நடிகர் தவசி விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் சிம்பு தவசியின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி செய்தது செய்துள்ளார். இந்த தொகையை அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் நேரடியாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தவசி மற்றும் அவரது குடும்பத்தினர் நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்