சிம்பு பட இயக்குநரின் புதிய படம் அறிவிப்பு

வெள்ளி, 28 மே 2021 (23:11 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய சென்னை -28, மாஸ், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் வெற்றி பெற்றன.

இதையடுத்து, இவர் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் மாநாடு படம் பிரமாண்டமாக உருவாகிவருகிறது.  இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.  இப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர்.முருகானந்தம் தனது ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.  இப்படம் வெங்கட்பிரபுவின் 10 வது படமாகும். இப்படத்தின் அறிவிப்பு விரையில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவன தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்