நான் எப்போது அப்படி சொன்னேன்… அதை நிரூபித்தால் நிர்வானமாக பீச்சில் நடக்கிறேன் –ஸ்ரீரெட்டி தடாலடி!

vinoth

செவ்வாய், 11 ஜூன் 2024 (11:34 IST)
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக அவர் பேசிவந்தார். மேலும் இந்த தேர்தலில் ஜெகன் மோகன் தோற்றுவிட்டால் “நான் கடற்கரையில் நிர்வாணமாக நடப்பேன்” என்று அவர் சொன்னதாக ஒரு தகவலும் பரவி வருகிறது.

தேர்தலில் ஜெகன் மோகன் தோற்ற நிலையில் “ஸ்ரீரெட்டி நிர்வாணமாக நடக்கவேண்டும் என ரசிகர்கள் அவரை தொல்லை செய்ய, இப்போது அவர் அதற்கு பதிலளித்துள்ளார். இது சம்மந்தமாக “நான் எப்போது நிர்வாணமாக நடப்பேன் என்று சொன்னேன். நான் அப்படி சொன்னதாக நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக நான் நிர்வாணமாக நடக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்