மரணத்திலிருந்து மீண்டு வந்த இளம் நடிகை..! கடவுளுக்கு நன்றி கூறிய ரசிகர்கள்

புதன், 21 நவம்பர் 2018 (11:01 IST)
பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்ரத்தா கபூர். பாலிவுட் நடிகையான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
 
இதையடுத்து, மருத்துவமனையில் தங்கியிருந்து தீவிர சிகிச்சை எடுத்து வந்த ஸ்ரத்தா கபூர், பின்னர் வீடு திரும்பிய பிறகும் இரண்டு வாரங்கள் ஓய்வில் இருந்தார். தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பூரணமாக குணமடைந்து விட்டது. 
 
இந்நிலையில் தற்போது பூரண குணமடைந்து படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளாராம். இதனால் அவரின் ரசிகர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்து ஸ்ரத்தா கப்பூரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்