'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்

J.Durai

திங்கள், 20 மே 2024 (12:42 IST)
இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு 'இந்தியன் 2' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.  
 
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  'இந்தியன் 2.' 'லைகா புரொடக்ஷன்ஸ்' சுபாஸ்கரன் & 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும் மேலும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர். 
 
இந்தியன் 2 படம் குறித்த இந்த அடுத்தடுத்த அப்டேட்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்