சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் இருவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கும், குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெறுகிறது.
ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
இதை, தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமிதா பிரமோத், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்திருப்பதோடு, வசனங்களையும் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக, ‘கிடாரி’ படத்துக்கு இசையமைத்த தர்புகா ஷிவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு, நேற்று பூஜை போடப்பட்டது. வரும் 19ஆம் தேதி முதல் குற்றாலம், தென்காசி பகுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது. சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.