நீச்சல் உடையில் தெறிக்க விட்ட ஷிவானி! வைரலான புகைப்படம்!

வியாழன், 25 மார்ச் 2021 (13:06 IST)
சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி மாலத்தீவில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இதற்கிடையில் தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார்.

இந்நிலையில் இப்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள ஷிவானி நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்