சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலைப் படமாக்குகிறாரா இயக்குனர் ஷங்கர்?

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:40 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் RC 15 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அதோடு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் உள்ள தெலுங்கு படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்